2021 மே 13, வியாழக்கிழமை

‘மருந்துகளுக்கும் உபகரணங்களுக்கும் தட்டுப்பாடு’

Gavitha   / 2021 பெப்ரவரி 28 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில், புற்றுநோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் வைத்திய உபகரணங்கள் இல்லை என்றும் முன்னாள் சுகாதார அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்  போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தமது ஆட்சி காலத்தில், மருந்து தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றும் தற்போது ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு குறித்து, ஊடகங்கள் கதைப்பதில்லை என்றும் அவர் கூறினார்.

அத்துடன் தேவையான எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை, அவசியமான நேரத்தில் கொள்வனவு செய்யத்தவறியமை காரணமாக, பொதுமக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

2021 பட்ஜெட் திட்டம் மீதான விவாதத்தின் போதும், ஆறு மாதங்களுக்கு முன்பு இடம்பெற்ற கொரோனா தொற்று தொடர்பான விவாதத்தின் போதும் தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது என்றம் ஆனால் தற்போது கொள்வனவு செய்திருக்கும் கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை, சனத்தொகையுடன் ஒப்பிடும்போது போதுமானதாக இல்லை என்றம் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .