Editorial / 2019 ஓகஸ்ட் 02 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாளிகாகந்த வீதி, கொழும்பு 10 பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று இரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டில் இருந்த நபருக்கும் வெளியில் இருந்து வந்த மற்றைய நபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வெளியில் இருந்து வந்த நபர் நிலத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளார்.
அதன்போது, சிறிய காயங்களுக்கு உள்ளான வீட்டில் இருந்த 77 வயதுடைய நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளார்.
சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் பிரதேசத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
31 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
2 hours ago