2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மருத்துவ சான்றிதழை பெற புதிய திட்டம் அறிமுகம்

Editorial   / 2020 ஜனவரி 22 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தினூடாக மருத்துவ அறிக்கையைப் பெறுவதற்கான புதிய செயற்றிட்டம் இன்று (22) முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவ அறிக்கையைப் பெறுவதற்காக  இணையத்தளம் ஊடாக முற்பதிவு செய்வதற்கான நிகழ்வு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் இடம்பெற்றது.

புதிய திட்டத்தினூடாக போக்குவரத்து மருத்துவ நிறுவனத்துக்கு செல்லாது, மருத்துவ அறிக்கையை பெறுவதற்கான தினத்தை இணையத்தளத்தின் ஊடாக முற்பதிவு செய்து கொள்ள முடியும்.

தாம் பதிவுசெய்யும் நேரத்திற்கு வருகைதந்து மருத்துவ பரிசோதனைகளை பெற்றுக் கொள்வதற்கு புதிய திட்டத்தினூடாக பயனாளிகளுக்கு முடியும்.

இதனூடாக தேவையற்ற கால வீணடிப்பு இல்லாது செய்யப்படுவதுடன், www.ntmi.lk என்ற இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து முற்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 27 ஆம் திகதி தொடக்கம் முற்பதிவுகள் ஏற்றுக் கொள்ளப்படும் என போக்குவரத்து மருத்துவ நிறுவனம் கூறியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .