2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

மற்றுமொரு விபத்தில் மாணவி உட்பட இருவர் மரணம்

Freelancer   / 2025 ஓகஸ்ட் 28 , பி.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொரவப்பொத்தானை - கஹடகஸ்திகிலிய பிரதான வீதியின் எலயாபத்து பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

வவுனியாவிலிருந்து அனுராதபுரத்திற்கு கண்ணாடி ஏற்றிச் சென்ற லொறி வீதியை விட்டு விலகி, பாலத்தின் தடுப்பு வேலியில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில், பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 10 வயதுடைய மாணவியும், லொறியின் உதவியாளரான 27 வயது இளைஞரும் உயிரிழந்துள்ளனர்.

லொறியில் பயணித்த சாரதி மற்றும் மற்றொரு நபர் பலத்த காயங்களுடன் ஹொரவப்பொத்தானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

உயிரிழந்த மாணவி மற்றும் லொறி உதவியாளரின் சடலங்கள் ஹொரவப்பொத்தானை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .