2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

மலேசிய உயர்ஸ்தானிகர் - ஜனாதிபதி சந்திப்பு

Freelancer   / 2025 ஓகஸ்ட் 13 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் பத்லி ஹிஷாம் பின் ஆதமுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.

விசேடமாக மலேசியாவின் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் கல்வி ஆகிய துறைகள் மற்றும் அண்மைய கால வெற்றிகள் குறித்த தனது அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாக  மலேசிய உயர் ஸ்தானிகர் இங்கு தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .