2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்தார் ஜனாதிபதி

Freelancer   / 2025 ஓகஸ்ட் 09 , பி.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் வருடாந்த எசல பெரஹெராவின் நிறைவு நிகழ்வில் கலந்துகொள்ள கண்டிக்குச் சென்ற  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (09) பிற்பகல் மல்வத்து மற்றும் அஸ்கிரி தரப்பு  மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து  ஆசிகளைப் பெற்றார்.

முதலில் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மல்வத்து மாநாயக்க தேரர்  வண, திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல  தேரரைச் சந்தித்து ஆசிர்வாதங்களைப் பெற்றதுடன், சிறு கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். 

பின்னர் அஸ்கிரி மகா விஹாரைக்குச் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அஸ்கிரி தரப்பின் மகாநாயக்க  வண, வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரை சந்தித்து நலம்  விசாரித்ததுடன், சிறு உரையாடலிலும் ஈடுபட்டார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X