Mayu / 2026 மே 17 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாலவானை பகுதியில் தொம்பே பிரதேச செயலகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணியொன்றில், கடந்த சில நாட்களாகத் தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினரின் கோரிக்கைகள் தொடர்பாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விசேட கவனம் செலுத்தியுள்ளார்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகவும் பதவி வகிக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரிய, மாணவர்களின் கோரிக்கைகள் மற்றும் அங்கு நிலவும் சூழல் குறித்து அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆய்வுகளை முன்னெடுத்துள்ளார்.
மாணவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நாளை (மே 18) பிரதமர் அலுவலகத்தில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
நாளை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தின் முடிவுகளின் அடிப்படையிலேயே, குறித்த விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் இறுதித் தீர்மானங்கள் எடுக்கப்படும் என உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இப்பகுதியில் மாணவர்கள் தங்கியிருப்பதால் ஏற்பட்டிருந்த இழுபறி நிலைக்கு, இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம் சுமுகமான தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
27 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
2 hours ago
3 hours ago