Editorial / 2020 நவம்பர் 08 , பி.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு உட்பட வெளி மாவட்டங்களிலிருந்து வரும் அனைவரும் 14 நாள்களுக்கு அவர்களின் வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவித்த ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விஜித அல்விஸ், இது கடுமையாக கடைப்பிடிக்கப்படும் என்றார்.
மேல் மாகாணத்தில் ஊரடங்கு தளர்த்தப்படுவதால், அங்கு வேலைச்செய்யும் இளைஞர், யுவதிகள், மலையத்துக்கு அதிகளவில் வருகைதரக்கூடும் எனத் தெரிவித்த அவர், அவ்வாறானவர்களை இனங்காணும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன என்றார்.
“இதேவேளை, கினிகத்ஹேன, கலுகல , தியகல, பொகவந்தலாவை, பெற்றசோ ஆகிய பொலிஸ் சோதனை சாவடிகளில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளன” என்றார்.
சோதனை சாவடிக்களையும் மீறி உள்ளே நுழைந்துவிட்டால், அவ்வாறானவர்களைத் தேடி அவர்களை 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்துமாறு ஹட்டன், நோட்டன் பிரிட்ஜ், மஸ்கெலியா, நல்லத்தண்ணி, நோர்வூட், பொகவந்தலாவை, வட்டவளை மற்றும் கினிகத்ஹேனை பொலிஸ் நிலையங்களுக்கு பணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
13 minute ago
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
41 minute ago
2 hours ago