2021 ஜூன் 21, திங்கட்கிழமை

முள்ளிவாய்க்கால் நினைவுக் கல் மாயம்; நினைவுச் சின்னமும் சிதைக்கப்பட்டது

J.A. George   / 2021 மே 13 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவேந்தல் முற்றம் சேதமாக்கப்பட்டுள்ளது.

நேற்று (12) மாலை  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பால்  வாகனத்தில் கொண்டுவரப்பட்டு புதிய பாரிய நினைவுக்கல் ஒன்று அங்கு இறக்கி வைக்கப்பட்ட  நிலையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை சுற்றி பொலிஸார் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில்,  புதிதாக கொண்டு வரப்பட்ட நினைவுக்கல் இரவோடு இரவாக  காணாமல் ஆக்கப்பட்டுள்ளதுடன் முள்ளிவாய்க்கால் பகுதியில் ஏற்கெனவே அமைக்கப்பட்டு இருந்த நினைவு  சின்னம் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .