2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

மழைநீரில் வந்த விஷப்பாம்பு கடித்ததில் இளைஞர் மரணம்

Freelancer   / 2024 நவம்பர் 29 , பி.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா - நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பு பகுதியில் வெள்ள நீரில் வந்த பாம்பு கடித்ததில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மழை காரணமாக வீட்டு முற்றத்தில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் சேகரித்து கொண்டிருந்த போது, ​​மழை நீரில் நீந்தி வந்த பாம்பு அவரை கடித்துள்ளது.

உடனடியாக அவர் நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கனமழை காரணமாக நெடுஞ்சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அம்பியூலன்ஸ்  வண்டி வவுனியாவை வந்தடைய நீண்ட நேரமாகியதால் இளைஞன் உயிரிழந்துள்ளார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .