Freelancer / 2024 நவம்பர் 29 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடும் மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக, விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
விவசாயத் திணைக்களத்திடம் உள்ள அரிசி மூட்டையின் இருப்பு மிகவும் குறைவாக இருப்பதாகவும், எனவே நெல் பயிரிடும் விவசாயிகளிடமிருந்தும் அதே அரிசியை கொள்வனவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
நட்டஈடு வழங்கும் நடவடிக்கையில், நெல், சோளம் போன்ற பயிர்களை மாத்திரம் வழங்கும் முறையை மாற்றி, இம்முறை மழையினால் சேதமடைந்த ஏனைய பயிர்களை பயிரிட்ட விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக பிரதியமைச்சர் தெரிவித்தார்.
வெங்காயம், உருளைக்கிழங்கு, சோயா, மிளகு ஆகியவற்றுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் கருவூலத்தில் உள்ள நிதி நிலைமையை கருத்தில் கொண்டு அமைச்சரவையில் கோரிக்கை விடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.AN
21 minute ago
25 minute ago
30 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
25 minute ago
30 minute ago
34 minute ago