2025 டிசெம்பர் 04, வியாழக்கிழமை

மாவிலாறு அணைக்கட்டை புனரமைக்க தாமதமாகும்

R.Tharaniya   / 2025 டிசெம்பர் 04 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

"சேதமடைந்துள்ள மாவிலாறு அணைக்கட்டு முழுமையாக புனரமைக்க,வடகீழ் பருவ பெயர்ச்சி மழை முடியும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்" என்று திருகோணமலை பிராந்திய நீர்ப்பாசன துறை பணிப்பாளர்,பிரதம எந்திரி க.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்"மகாவலி கங்கை மூலம் வந்து சேர்ந்த மிதமிஞ்சிய வெள்ள நீர் ஏற்படுத்திய தாக்கத்தால் மாவிலாறு அணைக்கட்டு சென்ற 30 ந் திகதி உடைப்பெடுத்தது"."மாவிலாறுஅணைக்கட்டு பகுதிக்கு செல்லும் வீதி இப்போதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

வெள்ளம் வடிந்த பின்பே சேதமடைந்த அணைக்கட்டு பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்ய முடியும்.அதன் பின்னர் முழுமையான சேதத்தை மதிப்பிடப்பட முடியும்".

"தற்போதையவெள்ளப்பெருக்கு காரணமாக சேருநுவர வெள்ளப் பாதுகாப்பு அணையின் நீலபொல மற்றும் தெஹிவத்த பகுதிகளில் ஏற்பட்ட சேதம்,கந்தளாய் சூரியபுர வெள்ளப் பாதுகாப்பு அணை உடைந்ததால் ஏற்பட்ட சேதம்  ஆகியவையும் மதிப்பீடு செய்யப்படும்" என்றும் அவர் கூறினார்.

எஸ்.கீதபொன்கலன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X