Editorial / 2019 ஜூன் 29 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் அதற்காக தனக்கு நட்டஈடு பெற்றுத் தருமாறும் வேண்டி, கொலொன்கொட, புதலுகஸ்யாய பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் ரஹீம் மஸீஹா முன்வைத்திருந்த மனுவை, பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு, உயர் நீதிமன்றம் நேற்று (28) தெரிவித்துள்ளது.
தான் கப்பலின் சுக்கானத்தை பதித்த ஆடையை அணிந்திருந்த வேளை, பௌத்தர்களின் புனித சின்னமான தர்ம சக்கரத்தை அணிந்ததாக தெரிவித்து, தன்னைப் பொலிஸார் கைது செய்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தியதாகத் தெரிவித்தே, குறித்த பெண் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதற் மனு மீதான விசாரணை நேற்று புவனெக அலுவிஹாரை, பிரியந்த ஜயவர்தன, முர்து பிரணாந்து ஆகிய உயர்நீதிமன்ற நீதிபதிகளின் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025