Editorial / 2018 செப்டெம்பர் 25 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
 20 மில்லியன் ரூபாயை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி ஐ.கே. மஹாநாம மற்றும் அரச மரக்கூட்டுதாபனத்தின்  முன்னாள் தலைவர் பீ. திசாநாயக்க ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிருவரும் இன்று கோட்டை பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, இவர்களை பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மஹாநாம, திசாநாயக்க ஆகிய இருவரும் கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் ஒரு பகுதியை இந்திய நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்காக, 54 கோடியை இலஞ்சமாக குறித்த நிறுவனத்திடமிருந்து கோரியிருந்ததுடன், அதில் முற்பணமாக 20 மில்லியனைப் பெற்றுக் கொண்டப் போது, இலஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் கடந்த மே மாதம் 3ஆம் திகதி கொழும்பில் வைத்து கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
4 hours ago
31 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
31 Oct 2025