Freelancer / 2025 ஒக்டோபர் 04 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனம் திருப்பி கையளிக்கப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வாகனம் நேற்று (03) திருப்பி கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதிகளின் உரிமைகள் நீக்குதல் சட்டம் நடைமுறைக்கு வந்ததன் பின்னர், மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகனங்களை திருப்பி கையளிக்குமாறு அறிவிப்பு வந்தது.
இந்நிலையில் தற்போது பாதுகாப்பு வாகனமும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என எச்சரித்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர், அடுத்த வாரம், பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு செயலர், மற்றும் பாதுகாப்பு பிரதானிகளைச் சந்தித்து மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு தேவையான வாகனங்களை பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கையை முன்வைப்போம் எனத் தெரிவித்துள்ளார். R
4 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
22 Dec 2025
22 Dec 2025