Niroshini / 2018 பெப்ரவரி 07 , மு.ப. 08:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.நிரோஷினி
மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரம் பற்றி விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் பாரிய ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் பற்றிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஆகியனவற்றின் அறிக்கைகள் மீது நாடாளுமன்றத்தில் நேற்று (06), ஐந்தரை மணிநேரம் விவாதம் நடத்தப்பட்டது.
காலை 10:30க்கு ஆரம்பமான விவாதம் மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. சபை ஒத்திவைப்பு வேளை விவாதமாகவே, இந்த விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தில், கலந்துகொண்டு உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கவில்லை.
அத்துடன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஆளும் மற்றும் எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சிறுபான்மையினங்களைச் சேர்ந்தவர்கள் எவரும் நேற்றைய விவாதத்தில் பங்கேற்கவில்லை.
50 minute ago
1 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
6 hours ago
9 hours ago