2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மஹிந்தவுக்கு எதிராக பி.பி.எஸ் வழக்கு

Gavitha   / 2017 ஜனவரி 03 , மு.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிரோஷினி

குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷ, அடிப்படையற்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என்று தெரிவித்த பொது பல சேனா, அதற்காக அவருக்கெதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது என அறிவித்தது. அத்தோடு, அது தொடர்பான அறிவித்தலை, அவருக்கு அனுப்பி வைக்கவுள்ளது எனவும் அறிவித்தது. மேலும், “தேசப்பற்றாளர்கள் என கூறிக்கொண்டிருப்போருடன் இணைந்து, அவர்களின் பேச்சுகளைக் கேட்டே அவர், இவ்வாறான கருத்துகளை வெளியிடுகிறார். இவ்வாறானவர்களால் தான், ஜனாதிபதித் தேர்தலில் அவர் தோல்வியடைந்தார்” என, அவ்வமைப்பின் தேசிய அமைப்பாளரான டிலந்த விதானகே தெரிவித்தார். 

கிருலப்பனையில் உள்ள, அவ்வமைப்பின் தலைமையகத்தில், நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற நேர்க்காணலின்போது, அமைச்சர்களான ராஜித சேனாரத்ன மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோருடன், எமது அமைப்பையும் இணைத்து மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இவை, ஆதாரமற்ற செய்திகளாகும். பொதுபல சேனாவையும் கலகொடஅத்தே ஞானசார தேரரையும் தனிமைப்படுத்தவே, இவ்வாறான முயற்சிகளில், மஹிந்த ராஜபக்ஷவின் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்” என்றார்.  

“நாம், சிங்கள மக்களுக்காகவே தொடர்ந்தும் குரல்கொடுத்து வருகிறோம். எம்மைப் பொறுத்தவரை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு மதிப்பளிக்கிறோம். ஆனால், அவரால் தெரிவிக்கப்படும் இவ்வாறான கருத்துக்களை, ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.  

நாம் சில முக்கியமான விடயங்களுக்காக, இந்த அரசாங்கத்தின் அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தது உண்மையே. ஆனால், இதில் எந்தவிதமான உட்பூசலும் கிடையாது” என, அவர் மேலும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .