2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

மஹிந்தவின் பயணம் ஆரம்பம்

Menaka Mookandi   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின், அரசியல் தொடர்பாடல்களுக்கான அலுவலகம், பத்தரமுல்லையில் இன்று முற்பகல் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் நீதியரசர் சரத் என்.சில்வாவும் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவே இந்த அலுவலகம் விசேடமாக திறந்துவைக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

இதுவரை காலமும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் நடவடிக்கைகள், நாரஹேன்பிட்டியவில் அமைந்துள்ள அபயாராம விகாரையிலேயே இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X