Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 20 , மு.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ மீதான விசாரணையை , பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, இன்று வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.
முறைப்பாட்டாளரின் சாட்சியம் தங்களுக்கு கிடைக்காததால், விசாரணையின்போது குறுக்கு கேள்விகளைக் கேட்க முடியாததன் காரணத்தினாலேயே இவ்விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (19) மற்றும் இன்று வெள்ளிக்கிழமை(20) ஆகிய தினங்களிலேயே மஹிந்த, விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்;.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சுயாதீன தொலைக்காட்சியில் தேர்தலுக்காக விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரங்களுக்கு, கட்டணம் செலுத்தாமல் நிறுவனத்துக்கு நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கே, மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்த ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
7 hours ago