2026 மார்ச் 17, செவ்வாய்க்கிழமை

மாணவனை கடத்திய 03 மாணவர்கள் கைது

Mayu   / 2023 டிசெம்பர் 06 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் பல்கலைக்கழகமொன்றில் கற்கும் 18 வயதுடைய மாணவருவனை கடத்திச் சென்று பலவந்தமாக காணியைப் பதிவு செய்ய முயற்சித்த தனியார் பல்கலைக்கழகமொன்றில் கல்வி கற்கும் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக கொஹுவல பொலிஸார் தெரிவித்ததுள்ளனர்.

கடத்தப்பட்ட மாணவன் தாக்குதலுக்குள்ளான நிலையில் களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த மாணவர்களால் சொகுசு காரொன்றும் திருடப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கடத்தப்பட்ட மாணவன், தனது தந்தையை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இறக்கி விட்டு

களுபோவில ஆசிரி மாவத்தையில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிய அவர் சிறிது நேரம் கழித்து தேவையொன்றிற்காக வீட்டிலிருந்து வெளியேறிய போதே கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X