Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 செப்டெம்பர் 30 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலை மாணவியின் புகைப்படத்தை நிர்வாணப் படத்துடன் இணைத்து இணையத்தில் பரப்பியதாக 18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவன் ஒருவன் காலி மேலதிக நீதவான் மகேஷிகா விஜேதுங்க முன் ஆஜர்படுத்தப்பட்டு ரூ. 200,000 சரீர பிணையில் விடுவிக்கப்பட்டான்.
அவன் அவனது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டான். பாதிக்கப்பட்டவரை துன்புறுத்தவோ அல்லது செல்வாக்கு செலுத்தவோ கூடாது என்று நீதவான் கடுமையாக எச்சரித்தார்.
பாடசாலையின் மாணவியின் தோழி தனது மூத்த சகோதரனுக்கு தனது படம் இணையத்தில் பகிரப்பட்டதாக தெரிவித்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அவரது சகோதரர் உடனடியாக காலி சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் புகார் அளித்தார்.
விசாரணையின் போது, சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். சிறுவன் சிறுமியை காதல் ரீதியாக பின்தொடர்ந்ததாகவும், அவள் அவரை நிராகரித்த பிறகு, அவள் முகத்தை ஒரு நிர்வாணப் புகைப்படத்துடன் டிஜிட்டல் முறையில் இணைத்து ஆன்லைனில் பதிவேற்றியதாகவும் பொலிஸார்தெரிவித்தனர்.
காலியில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகார் IP கயானி மற்றும் சார்ஜென்ட் பிரியந்த ஆகியோர் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago