2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மாலி தாக்குதல்: சடலங்கள் கொண்டுவரப்படும்

Editorial   / 2019 ஜனவரி 26 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய நாடுகளின் அமைதிப் படையில் பணியாற்றுவதற்காக, மாலி இராச்சியத்துக்குச் சென்றுள்ள இலங்கைப் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தியமையால் உயிரிழந்த இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த இருவரது சடலங்கள், இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது என, இராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவத்தில், எச்.டபிள்யூ.ஜயவிக்ரம எனும், பொலன்னறுவையைச் சேர்ந்த 11ஆவது இலகு காலட்படையில் பணியாற்றிய, இராணுவத் தளபதி உயிரிழந்துள்ளார்.

அத்தோடு, எஸ்.எஸ்.விஜேகுமார எனும், குருநாகல், பொல்பிட்டிம பகுதியைச் சேர்ந்த கோப்ரால் ஒருவரும் உயிரிழந்துள்ளார். இவர், 1ஆம் இயந்திர காலாட்படையைச் சேர்ந்தவர் என்று இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .