S.Renuka / 2025 மே 18 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள மின்கட்டண திருத்த யோசனை தொடர்பாக மக்கள் கருத்துகளை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரியுள்ளது.
இலங்கை மின்சார சபை முன்வைத்த பரிந்துரையை பரிசீலனை செய்து வருவதாகவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்படும் மாற்றுப் பரிந்துரை தொடர்பான பொதுமக்களின் கருத்துக் கோரும் நடவடிக்கை எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கி, 23ஆம் திகதி முதல் வாய்மொழியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் பொதுமக்களின் கருத்துக்கள் கோரப்படவுள்ளது.
அனைத்து பரிந்துரைகள் மற்றும் கருத்துக்களையும் பரிசீலித்த பின்னர், இறுதி முடிவு அறிவிக்கப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம் ஜூன் முதலாவது அல்லது இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படுமெனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இலங்கை மின்சார சபையின் முன்மொழிவு நேற்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
மின்சாரக் கட்டணத்தை 18.3 வீதத்தால் அதிகரிக்க இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
18 minute ago
24 minute ago
27 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
24 minute ago
27 minute ago
37 minute ago