2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மின்சாரத் தாக்குதலில் ‘கூப்பர்’ உயிரிழந்தது

Editorial   / 2018 ஒக்டோபர் 10 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா- இரட்டைப்பெரிய குளம் பொலிஸ் மோப்ப நாய் பிரிவில் இருந்த கூப்பர் என்ற மோப்ப நாய் இன்று காலை மின்சார தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நாய் மின்சார தாக்குதலுக்கு இலக்கான போது, அதனைக் காப்பாற்றச் சென்ற கூப்பரை பராமரிக்கும் பொலிஸ் கான்ஸ்டபிளும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த நாய் லெப்டர்டோ இனத்தைச் சேர்ந்ததென்றும், இந்த கூப்பர் என்ற நாயின் மரணம் தொடர்பில், வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை ஹட்டன் பொலிஸ் நிலைய மோப்ப நாயான கோராவும் மட்டக்களப்பு பொலிஸ் ​தலைமையகத்தின் மோப்ப நாயான டொலியும் அண்மையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .