Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 நவம்பர் 28 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ் - சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் ஒருவர் அலுவகத்தில் மின்சாரம் தாக்குதலுக்குள்ளாகி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (28) உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி நுணாவில் பகுதியை சேர்ந்த கஜந்தன் (வயது 26) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
அலுவகத்தில் பணியில் இருந்த வேளை , தண்ணீர் வராததால் , தண்ணீர் தொட்டியை பார்ப்பதற்காக சென்ற வேளை , அங்கிருந்த மின் வயரில் ஏற்பட்ட சேதம் காரணமாக பணியாளருக்கு மின்சாரம் தாக்கியுள்ளது.
அதனை அடுத்து அலுவகத்தில் கடமையில் இருந்த ஏனையவர்கள் இளைஞனை, சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். M
எம்.றொசாந்த்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago