2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மிளகு இறக்குமதி நிறுத்தம்

Editorial   / 2019 ஜனவரி 28 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்நாட்டு மிளகு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் நோக்கில், வெளிநாடுகளிலிருந்து மிளகு இறக்குமதி செய்வதை முற்றாக நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, விவசாய அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்தார்.

என்டபிரைசஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டதின் கீழ், தம்புள்ளை பிரதேசத்திலுள்ள விவசாயிகளுக்கு கடனுதவிகளை வழங்கும் நிகழ்வில், இன்று (28) பங்கேற்று உரையாற்றும் போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், தாம் இந்தத் தீர்மானத்தை எடுத்தாகவும் தெரிவித்தார்.

அத்துடன், உள்நாட்டு உளுந்து உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் வகையில், இறக்குமதி செய்யப்படும்  உளுந்து கிலோ ஒன்றுக்காக ரூ.200 வரி விதிக்கப்படுமென அமைச்சர் பீ.ஹரிசன் குறிப்பிட்டதுடன், மரக்கறி ஏற்றிச்செல்லும் லொறிகளைக் கொள்வனவு செய்வதற்காக என்டபிரைசஸ் ஸ்ரீ லங்கா கடன் வேலைத்திட்டத்தின் ஊடாக, கடன் வசதிகளை  வழங்குவதற்கு நிதியமைச்சில் தாம் கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .