2026 மே 02, சனிக்கிழமை

மீண்டும் படைப்புழு தாக்கம்

J.A. George   / 2020 டிசெம்பர் 11 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

படைப்புழு தாக்கம் சோளம் பயிரிடுவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ராஜரட்ட விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம் மாவட்டத்தில் பலுகஸ்வேவா பிரதேச செயலக பிரிவில் உள்ள ஹோரிவில உள்ளிட்ட பல கிராமங்களில் பெரியயளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. 

இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் மக்காச்சோளம் படைப்புழு தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பல முறை படைப்புழு தாக்கம் தாக்குதல் குறித்து  விவசாயத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த போதிலும், எந்தவொரு விவசாய அதிகாரியும் தங்கள் பயிர்களை ஆய்வு செய்ய இதுவரை வரவில்லை என்று ஹோரிவில  பகுதியில் உள்ள சோள விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .