2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

மீண்டும் வாகனங்களை கோரும் மஹிந்த - மைத்திரி

Freelancer   / 2025 ஒக்டோபர் 11 , பி.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திடம் ஒப்படைத்த பாதுகாப்பு வாகனங்களை மீளக் கோரியுள்ளனர் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு வாகனங்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்தமையால் அவர்களின் பாதுகாப்பிற்கு ஏதேனும் அச்சுறுத்தல் காணப்படுமாயின் அந்த வாகனங்களை மீண்டும் வழங்க வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதிகளின் இந்த கோரிக்கையை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள பாதுகாப்பு மறு ஆய்வுக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். R

  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X