Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 08 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் மீன்பிடித் தொழிற்றுறையை விருத்தி செய்வதற்காக, தனது நாட்டின் நவீன தொழில்நுட்பத்தை வழங்குவதற்கு, நோர்வே உறுதியளித்துள்ளது என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று (07) தெரிவித்தார்.
நோர்வே பிரதமர் எமா சோல்பேர்கை, இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை சந்தித்த பிரதமர், இணைந்த ஊடகச் சந்திப்பிலும் பங்குகொண்டார்.
கடந்த காலங்களில், நோர்வேயால் இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகளுக்கு, இதன்போது நன்றி தெரிவித்த பிரதமர், ஹம்பாந்தோட்டை போன்ற, கிராமப்புறப் பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கு, நோர்வேயின் உதவிகள் கிடைக்கப்பெற்றன எனத் தெரிவித்தார்.
இந்து சமுத்திரத்தில் சமாதானத்தைப் பேணுவதற்கும், இலங்கையில் மீன்பிடித் தொழிற்றுறையை அபிவிருத்தி செய்வதற்கும், நோர்வேயின் உதவிகளை, இலங்கை நாடியுள்ளது எனத் தெரிவித்தார். இரு தலைவர்களும், நிலைத்திருக்க்கூடிய அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடியதோடு, இந்து சமுத்திரத்தை, நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்தி வலயமாக மாற்றுவது குறித்து ஆராய்ந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .