2025 ஜூலை 05, சனிக்கிழமை

மீன் இறக்குமதிக்கான வரியை அதிகரிக்கத் தீர்மானம்

Editorial   / 2019 டிசெம்பர் 25 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீன் இறக்குமதிக்காக அறவிடப்படும் வரியை அதிகரிப்பதற்கு, வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு தீர்மானித்துள்ளதெனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆரம்பத்தில் ஒரு கிலோகிராமுக்காக 100 மூபாய் வரி அறவிடப்பட்ட நிலையில், கடந்த அரசாங்கத்தில் இது 25 ரூபாய் வரை குறைக்கப்பட்டது. இதனால் மீன் இறக்குமதி அதிகரிக்கப்பட்டதுடன், உள்நாட்டு மீனவர்களும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதால், மீன் இறக்குமதிக்கான வரியை 100 ரூபாயாக அதிகரிக்க அதிகரிப்பதற்கு வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு தீர்மானித்துள்ளது.

மேலும் உரிய பராமரிப்பின்றி அழிவடைந்து செல்லும்  நெல் களஞ்சியசாலைகளை விரைவாக சீர்செய்யவும் குறித்த உப குழு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (24) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .