Editorial / 2018 மார்ச் 28 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா ஆகிய மூவரையும் படுகொலைச் செய்வதற்கு சூழ்ச்சிகளை மேற்கொண்டனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இவருவர் விடுவிக்கப்பட்டனர்.
அவ்விருவருக்கு எதிரான வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் முன்னிலையில் நேற்று (27) எடுத்துகொ ள்ளப்பட்டபோதே அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள், முறைப்பாட்டாளர்களினால், சாதாரண சந்தேகமின்றி நிரூபிக்கப்படவில்லை எனத் தீர்மானித்த நீதிபதி, அவ்விருவர் மீதான சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் நீதிபதி, அவர்களை விடுவித்தனர்.
கிரிதரன் என்றழைக்கப்படும் கனகரத்னம் ஆதித்தியன் மற்றும் அண்ணா என்றழைக்கப்படும் கந்தவனம் கோகுலநாத் ஆகிய இருவருமே இவ்வாறு விடுவிக்கப்பட்டனர்.
2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதிக்கும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்திலேயே இந்த மூவரையும் படுகொலைச் செய்வதற்கு, அவ்விருவரும் சூழ்ச்சிகளை மேற்கொண்டனர் என சட்டமா அதிபரினால், அவர்களுக்கெதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
41 minute ago
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
5 hours ago
9 hours ago
9 hours ago