Freelancer / 2021 ஓகஸ்ட் 21 , பி.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு முடக்கப்படும் காலத்தைக் குறைப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
நாட்டு மக்களின் வாழ்க்கையும் மக்களின் வாழ்வாதாரமும் ஒரு அரசாங்கத்துக்கு சமமாக முக்கியம் என்று சுட்டிக்காட்டினார்.
முடக்கப்படும் காலம் குறைக்கப்படாவிட்டால் நாடு முன்னேற முடியாது என்று குறிப்பிட்ட அவர், பெரிய பொருளாதார காரணிகளாலும், மக்களின் உயிர்களாலும் நாட்டுக்கு ஏற்படும் இழப்பு சிறியதல்ல என்றும் குறிப்பிட்டார்.
நாட்டின் வருமானம் இழக்கப்பட்டால், கடன்களை திருப்பிச் செலுத்த முடியாது என்று தெரிவித்த அவர், தற்போதைய கொரோனா தொற்றுநோயை அரசியல் ஆதாயமாக்க சிலரின் முயற்சிகளுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.
38 minute ago
42 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
42 minute ago
52 minute ago