Freelancer / 2021 ஓகஸ்ட் 21 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.சுந்தரலிங்கம்
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை கருத்தில் கொண்டு பல்வேறு தரப்பினரும் நாட்டை முடக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து அரசாங்கம் நேற்று (20) இரவு முதல் எதிர்வரும் 30 ம் திகதி அதிகாலை வரை ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்தியது.
இதனால் மலையக நகரங்கள் இன்று (21) அடங்கிப்போய் காட்சியளித்தன.
நகரங்களில் மருந்தகங்கள் மாத்திரம் திறந்து காணப்பட்டதுடன் ஏனைய கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
நகர சுத்திகரிப்பாளர்கள் மாத்திரம் ஆங்காங்கே சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபடுவதனை காணக்கூடியதாக இருந்தது.
புகையிரத சேவைகள் பொது போக்குவரத்து போன்றன எதுவும் இன்று (21) இடம்பெறவில்லை.
ஒரு சில இடங்களில் அரச அபிவிருத்தி பணிகள் வழமை போல் இடம் பெற்று வருவதனையும் காணக்கூடியதாக இருந்தன.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நேற்றை தினம் அதிக வரிசை காணப்பட்ட போதிலும் இன்று மிகவும் குறைவான எண்ணிக்கையிலான வாகனங்களே காணப்பட்டன.
பெருந்தோட்டங்களில் தேயிலை தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் ஏனைய நாட்களை போலவே இன்றும் தமது தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.
இதனை தவிர மலையக நகரங்களில் அத்தியாவசிய பயணங்களை மேற்கொள்வோர் மாத்திரம் செல்வதனையும் அனுமதி பெற்ற வாகனங்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடுவதனை காணக்கூடியதாக இருந்தன. R










3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago