Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 15 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த வருடம் முதல் முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மய்யத்தில் நடைம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அடுத்த வருடம் முதல் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறையலாம் எனவும், மீண்டும் விலையில் அதிகரிப்பு ஏற்படாது எனவும் விவசாய அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்வரும் டிசெம்பர் மாதத்தின் பின்னர் நாட்டில் முட்டை உற்பத்தி மேலும் அதிகரிக்கும் எனவும் அவர் கூறினார்.
மேலும், பால் உற்பத்தியில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்வதற்கான குறுகிய மற்றும் நீண்ட காலத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
அதன் கீழ், 2023 முதல் 2028 வரை தேசிய பால் கொள்கை என்ற ஐந்தாண்டு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. (N)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago