Editorial / 2019 மே 12 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த உத்தர தேவி ரயிலில் மோதுண்டு பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில், குறித்த ரயில் மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பஸ்ஸின் சாரதி பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
தனியாருக்குச் சொந்தமான பஸ் ஒன்றே இவ்வாறு ரயிலில் மோதுண்டு விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பஸ்ஸில் சாரதி மட்டும் இருந்ததாகவும், ரயில் வருவதற்கு முன்னர் முந்திச் செல்ல முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து நேர்ந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த ரயிலில் மோதுண்ட பஸ், 50 மீற்றர் தூரம் வரையில் ரயிலில் சிக்குண்டு இழுத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
8 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
15 Dec 2025