2026 மே 06, புதன்கிழமை

முன்னறிவித்தலின்றி முடக்கப்படும்

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 29 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்படும்  பொலிஸ் பிரிவுகள், கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் , எவ்வித முன்னறிவித்தலுமின்றி முடக்கப்படுமென, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவி்த்துள்ளார்.

எனவே இந்த நிலைக்கு முகம் ​கொடுக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

இதற்கு முன்னர் முன்னறிவித்தல்  வழங்கப்பட்டு பிரதேசங்கள் முடக்கப்பட்டதென்றும் ஆனால் தற்போதைய ​தொற்று அதிகரிப்பின் காரணமாக எவ்வித அறிவிப்பும் இன்றி முடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் நாட்டை முழுமையாக முடக்க எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .