Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2018 நவம்பர் 11 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்றத்தை கலைப்பது வரை இடம்பெற்ற அனைத்து சம்பவங்களுக்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவே பொறுப்புக் கூற வேண்டுமெனவும், அவரது நடவடிக்கைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற, நாட்டின் தற்போதைய நிலைக்குறித்து ஊடகங்களை தெளிவுப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
சபாநாயகர் அனைத்து நடவடிக்கைகளையும் குழப்பி விட்டது மட்டுமின்றி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்தே இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.
அவர் அமெரிக்க தூதுவர்கள் மற்றும் ஏனைய உலக நாடுகளின் தூதுவர்களுடனே கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டார்.
அதனால் தான் அவர்களிடம் எமது நாட்டு பிரச்சினைக் குறித்து அபிப்ராயங்களைக் கேட்கின்றார். எனவே இலங்கையின் உள்விவகார பிரச்சினைகளைத் தீர்க்க சர்வதேசத்தை நாடும் சபாநாயகரின் நடவடிக்கை அவமானத்துக்குரியது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
11 Jul 2025
11 Jul 2025