Editorial / 2023 ஒக்டோபர் 29 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
குடிபோதையில் வாகனம் செலுத்தி இரண்டு வாகனங்களுக்கு விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவை எதிர்வரும் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (29) உத்தரவிடப்பட்டுள்ளது.
பம்பலப்பிட்டியிலிருந்து தெஹிவளை நோக்கி முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஓட்டிச் சென்ற கார், வெள்ளவத்தை கடற்கரையோரத்தில் உள்ள மிராஜ் ஹோட்டலுக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த காரையும் பஸ்ஸையும் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டார்.
சுவாச பரிசோதனையின் போது முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் குடிபோதையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதாக வெள்ளவத்தை பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
இதனையடுத்தே, கல்கிஸை நீதவான் நீதிமன்ற நீதவான் கோஷல சேனாதீர, அவரை நவம்பர் 1ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
15 minute ago
16 minute ago
30 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
16 minute ago
30 minute ago
45 minute ago