Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
S.Renuka / 2025 பெப்ரவரி 27 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ், இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடையவர் என குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை நாடு கடத்துவதற்கான வேண்டுகோளை இலங்கை சட்டமா அதிபர் திணைக்களம் விடுத்திருந்தது.
எனினும், சிங்கப்பூரின் சட்டங்களின் கீழ் இலங்கைக்கு அவரை நாடு கடத்த முடியாது என சிங்கப்பூரின் சட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலஞ்ச ஊழல் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கினை தொடர்ந்து 2025 பெப்ரவரி 25ஆம் திகதி முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் நீதிமன்றில் ஆஜராகவேண்டும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி வழக்கு தொடர்பில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனைக் கைது செய்யுமாறு, கொழும்பு நிரந்தர ட்ரயல்-அட்-பார் பெஞ்ச் ஏற்கெனவே, இன்டர்போல் மூலம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
கடந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது அனுரகுமார திசநாயக்க, அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு கொண்டுவருவேன் என்றும் இது தனது முன்னுரிமை எனவும் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago