2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

முன்விரோதத்தால் 3 வயது சிறுவனை கொன்ற பெண்

Freelancer   / 2024 செப்டெம்பர் 10 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராதாபுரம் அருகே ஆத்துகுறிச்சியில் 3 வயது சிறுவனைக் கொன்று, உடலை வொஷிங் மெஷினில் மறைத்து வைத்த பெண்ணை பொலிஸார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ஆத்துகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவரின் 2ஆவது மகனான, மூன்று வயதான சஞ்சய், கடந்த 9ஆம் திகதி காணாமல் போயுள்ளார்.

இது தொடர்பில் ராதாபுரம் பொலிஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில், விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், எதிர்வீட்டு பெண்மணி தங்கத்திற்கும், விக்னேஷ் குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து அந்தப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்து, சாக்கு மூட்டையில் கட்டி தனது வீட்டிலுள்ள துணி துவைக்கும் இயந்திரத்திற்குள் மறைத்து வைத்தது தெரியவந்தது.

இந்நிலையில், சிறுவனின் உடலை கைப்பற்றிய பொலிஸார், உடற்கூறு பரிசோதனைக்காக ராதாபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட தங்கத்தை கைது செய்து, வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், 40 வயதான தங்கம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மகனை இழந்துள்ளார். விபத்து ஒன்றில் சிக்கி அவரது மகன் உயிரிழந்ததாக தெரிகிறது. இதனால் அவர் மனமுடைந்த நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே எதிர்வீட்டு விக்னேஷ் குடும்பத்திற்கும், தங்கம் குடும்பத்திற்கும் தகராறு இருந்து வந்த நிலையில், அவர்கள் குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருப்பதை சகித்து கொள்ள முடியாத அவர், சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை வீட்டுக்குள் அழைத்துச் சென்று கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.S

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X