Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2025 மார்ச் 09 , பி.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜம்மு காஷ்மீர்: இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு சொந்தமான குளிர்பான நிறுவனத்துக்கு பாட்டில் தயாரிக்கும் ஆலை அமைப்பதற்காக ஜம்மு காஷ்மீரில் 25.75 ஏக்கர் நிலத்தை இலவசமாக ஒதுக்கியதாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது ஜம்மு காஷ்மீரை ஆளும் தேசிய மாநாட்டு கட்சியின் முதல்வர் ஓமர் அப்துல்லாவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 534 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதித்துள்ளனர். தற்போது முத்தையா முரளிதரன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற முத்தையா முரளிதரன் இப்போது பிஸினஸ்மேனாக மாறிவிட்டார். இலங்கையில் குளிர்பான நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். அவரது கம்பெனியின் பெயர் சிலோன் பீவெர்ஜ் என்பதாகும்.
இந்த பிசினஸை நம் நாட்டிலும் விரிவுப்படுத்தும் பணியில் முத்தையா முரளிதரன் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தான் தற்போது முத்தையா முரளிதரன் நிறுவனத்தால் ஜம்மு காஷ்மீர் மாநில அரசுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. அதாவது முத்தையா முரளிதரன் நடத்தி வரும் சிலோன் பீவெர்ஜ் நிறுவனம் சார்பில் ரூ.1,600 கோடி முதலீட்டில் குளிர்பானம் மற்றும் அலுமினியம் கேன் தயாரிப்பு ஆலை என்பது ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்காக முத்தையா முரளிதரனுக்கு 25.75 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த இடத்தை முத்தையா முரளிதரன் நிறுவனத்துக்கு ஜம்மு காஷ்மீர் அரசு தான் வழங்கி உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனை ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கேளவ்ியாக எழுப்பி உள்ளன. இந்த கேள்விக்கு முதல்வர் ஓமர் அப்துல்லா பதிலளிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற முத்தையா முரளிதரன் இப்போது பிஸினஸ்மேனாக மாறிவிட்டார். இலங்கையில் குளிர்பான நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். அவரது கம்பெனியின் பெயர் சிலோன் பீவெர்ஜ் என்பதாகும்.
இந்த பிசினஸை நம் நாட்டிலும் விரிவுப்படுத்தும் பணியில் முத்தையா முரளிதரன் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தான் தற்போது முத்தையா முரளிதரன் நிறுவனத்தால் ஜம்மு காஷ்மீர் மாநில அரசுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. அதாவது முத்தையா முரளிதரன் நடத்தி வரும் சிலோன் பீவெர்ஜ் நிறுவனம் சார்பில் ரூ.1,600 கோடி முதலீட்டில் குளிர்பானம் மற்றும் அலுமினியம் கேன் தயாரிப்பு ஆலை என்பது ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்காக முத்தையா முரளிதரனுக்கு 25.75 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த இடத்தை முத்தையா முரளிதரன் நிறுவனத்துக்கு ஜம்மு காஷ்மீர் அரசு தான் வழங்கி உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனை ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கேள்வியாக எழுப்பி உள்ளன. இந்த கேள்விக்கு முதல்வர் ஓமர் அப்துல்லா பதிலளிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
49 minute ago
57 minute ago
1 hours ago