2025 மே 24, சனிக்கிழமை

முல்லை விபத்தில் ஒருவர் பலி; 22 பேர் காயம்

Freelancer   / 2022 மார்ச் 20 , பி.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னால் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸை, பின்னால் சென்ற தனியார் பஸ் முந்தி செல்ல முற்பட்ட போது வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த பஸ்ஸில் 23 பேர் பயணித்துள்ளதாக முதற்கட்ட தகவல்களில் அறியமுடிகிறது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X