Freelancer / 2026 பெப்ரவரி 19 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகாராஷ்டிராவில் கடந்த 2014 இல் கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 5 வீத இடஒதுக்கீடு வழங்க அவசர சட்டம் பிறப் பிக்கப்பட்டது.
இந்த உத்தரவு மத அடிப்படையிலானது என மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 50 வீத இடஒதுக்கீடு உச்ச வரம்பை மீறுவதாக உள்ளது என வாதிடப்பட்டது. இந்த வழக்கில் அவசர சட்டத்தை அமல்படுத்துவதை மும்பை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் 2014 தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க – சிவசேனா கூட்டணி ஆட்சிக்கு வந்தது.
இந்த அரசு அவசர சட்டத்தை பேரவையில் சட்டமாக நிறைவேற்றவில்லை. இதனால் அந்த அவசர சட்டம் காலாவதியானது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் நடைமுறைக்கு வராத 5 வீத இடஒதுக்கீடு உத்தரவை மகாராஷ்டிர அரசு நேற்று முறைப்படி ரத்து செய்தது. (a)
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
02 May 2026
02 May 2026