Editorial / 2021 மார்ச் 02 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
“சண் அங்கிள்” என்று அன்பாய் அனைவராலும் அழைக்கப்படும் மூத்த ஊடகவியலாளர் சண்முகராஜா காலமானார்.

“சண் அங்கிள்” என்று அன்பாய் அனைவராலும் அழைக்கப்படும் மூத்த ஊடகவியலாளர் சண் சண்முகராஜா யாழ்ப்பாணத்தில் இன்று (02) காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 85 ஆகும்.
தினபதி , சிந்தாமணி , வீரகேசரி ஆகிய தேசிய பத்திரிகைகளில் கடமைபுரிந்த இவர், மூத்த ஊடக ஜாம்பவன் என்றழைக்கப்படும் அவரது இழப்பு ஊடகத் துறைக்கு பேரிழப்பாகும்
இவர், கலை இலக்கிய மற்றும் சினிமா விடயங்களில் மிகவும் ஆர்வமாக்கவர். அதனால்தான் அவரை, இலங்கை தமிழ் ஊடக வரலாற்றில் “சினிமா விக்கிபிடியா” என்றும் பலரும் அழைப்பர்.
“சண் அங்கிள்”, சகலருடனும் நெருக்கமாக பழகுவார். அவருடைய எழுத்துக்கள் எவ்விதமான திருத்தங்களுக்கும் உட்படுத்தப்படாமலே அச்சுக்கு செல்லுமெனவும் அந்தளவுக்கு பத்திரிகை ஆசிரியருக்கும் ஆசிரியர் பீடத்துக்கும் மிகவும் விசுவாசமாகவும் நம்பிகையுடனும் திகழ்ந்துள்ளார்.
அன்னாரது இறுதி மரியாதை தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .