Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜனவரி 23 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள மக்கள், மண்சரிவு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவுறுத்தியுள்ளது.
குறித்த பகுதிகளில் நேற்றைய தினம் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியதாக நிறுவகத்தின் மண்சரிவு தொடர்பான ஆய்வுப் பிரிவின் சிரேஷ்ட புவிசரிதவியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தின் உடுதும்பர பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கும் மாத்தளை மாவட்டத்தின் லக்கல, பல்லேகம மற்றும் வில்கமுவ பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதிக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மண்சரிவு எச்சரிக்கை இன்று (23) இரவு 8.30 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட புவிசரிதவியலாளர் வசந்த சேனாதீர சுட்டிக்காட்டியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago