Editorial / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கெத்ஹேன நீர் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப் பணிகளின் காரணமாக எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு களுத்துறை, களுத்துறையை அண்மித்த பிரதேசங்கள் சிலவற்றில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறுமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வாதுவ, வஸ்கடவ, பொத்துபிட்டிய, களுத்துறை, கட்டுகுருந்த, நாகொடை, பயாகல ஆகிய பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் பிலிமினாத்த, பொம்புவல, மக்கோன, பேருவளை, களுமோதரை, மொரகொல்ல, அளுத்கம, தர்கா நகர், பெந்தோட்டை ஆகிய பகுதிகளிலும் இது செயற்படுத்தப்படுமென சபையால் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
14 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
31 minute ago