Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 28 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெரும்பான்மை இருப்பதாக போலியான ஆவணங்கள் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
புஞ்சி பொரளையில் உள்ள சுதந்திர ஊடகக் கேந்திர நிலையத்தில் நேற்று(27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறுத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், ஐக்கியத் தேசியக் கட்சி அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட இடைக்கால கணக்கு அறிக்கை 102 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இதனூடாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெரும்பான்மை இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும், நீதிமன்றத்தை அவமதித்ததாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஆனால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெரும்பான்மை இருப்பதாக நீதிமன்றில் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்திருந்த மேற்குறிப்பிட்டிருந்தவர்களுக்கு எதிராகவே நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கமாட்டார். அவர் சுயாதீனமாகவே இயங்குவார். ஆகவே, அமைச்சுக்களின் விடயப்பரப்புக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எந்தநேரத்தில் வேண்டுமானாலும் மாற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அண்மைக்கால செற்பாடுகள், தமிழ், சிங்கள இன மக்களின் ஐக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன என்றும் அவர் கூறினார்.
பீல்ட் மார்ஷல் சர்த் பொன்சேகா, முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் எனவும் கூறிய அவர், ஜனாதிபதியை மதிக்காது செயற்பட்டால், பொன்சேகாவின் பீல்ட் மார்ஷல் பதவியை எந்நேரத்தில் வேண்டுமானாலும் ஜனாதிபதியால் பறிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago