R.Maheshwary / 2021 ஏப்ரல் 01 , மு.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேட் இன் ஸ்ரீ லங்கா (Made in srilanka) என்ற கருப்பொருள், சில அரசியல் தீர்மானங்களால் அழிவடைந்துள்ளதெனத் தெரிவித்த கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ஸ, காலநிலைக்கு ஏற்பவே Made in srilanka உற்பத்தி பயனடையுமா இல்லையா என்று கூறமுடியும் என்றார்.
கொழும்பில் நேற்று (31) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், “77ஆம் ஆண்டில் பொருளாதாரச் சூறாவளி எவ்வாறு ஏற்பட்டதெனக் கேள்வி எழுப்பிய அவர், 70, 77ஆண்டுகளில், சமகி பெரமுன அரசாங்கம் இருந்தது. உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு அதிகாரத்தையும் தேசியவாதத்தையம் ஊக்குவித்த அரசாங்கமாக அது காணப்பட்டது. ஆனால், அந்த அரசாங்கத்தில் பீலிக்ஸ் டயஸ் என்ற ஒருவர் இருந்தார். இடதுசாரி கட்சியைத் துரத்திவிட்டு, தனி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, நாட்டை நிர்வகிப்பது குறித்து பீலிக்ஸ் சிந்தித்தார். அதனடிப்படையில், முதலில் சமசமாஜ கட்சியையும் அடுத்தது கம்யூனிச கட்சியையும் வெளியில் அனுப்பினார்” என்றார்.
“இறுதியில், 1977ஆம் ஆண்டில் ஜே.ஆர். ஜயவர்தனவை வெற்றிபெற வைத்தார். இதனால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆசனங்கள் 8ஆக்க் குறைவடைந்தன. அன்றிருந்து, Made in srilanka திட்டம் வெளிநாடுகளால் உயிரூட்டம் பெற்று மாற்றத்தைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
“அன்று, பீலிஸ் டயஸுற்கு இவ்வாறான யோசனை உருவாகாமல் இருந்திருந்தால், சமகி பெரமுனவின் ஐக்கியம் குளறுபடி ஏற்படாமல் இருந்திருந்தால், ஜயவர்தனவின் யுகம் அன்று உருவாக்கம் பெற்றிருக்காது” என்றார்.
“அந்த அரசியல் நிலைப்பாடு உள்ளூர் தேசியவாத்ததை இல்லாதொழித்து, வெளிநாட்டு உற்பத்திகளை சந்தைக்குள் நிலை நிறுத்தியது. அந்த அரசாங்கத்தின் பிழையான நிலைப்பாடு காரணமாகவே, இந்த நாட்டின் நிர்வாகத்திலும் தேசியவாதம் முற்றாக அழிக்கப்பட்டது.
“ரிச்சட் பீரிஸ், ஜயவர்தன போன்றவர்கள், இன்றைய அரசியலிலும் உள்ளனர். அவர்களை சரியாக அடையாளம் கண்டு, முன்செல்வதன் மூலம், மேட் இன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தை வெற்றிபெறச் செய்ய முடியும்” என, அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
5 minute ago
22 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
22 minute ago
2 hours ago