2025 ஜூலை 05, சனிக்கிழமை

மேல் மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஆரம்பம்

Editorial   / 2019 டிசெம்பர் 25 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்தில் விசேட டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் தற்போது  முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவென, டெங்கு ஒழிப்பு  தேசிய வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் அநுர ஜயசேகர  தெரிவித்துள்ளார்.

மழையுடன் கூடிய வானிலையைத் தொடர்ந்து,  மேல் மாகாணத்தில்  டெங்கு நோய்த் தாக்கம் பெரிதும் அதிகரித்துள்ளது. இந்நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கிலேயே,  இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனத் தெரிவித்துள்ளார்.

 இந்த வருடத்தின்,  ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல்,  டிசெம்பர் மாதம் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில்  94,230 பேர்  டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதோடு,  90 க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனரென, அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, டெங்கு நோயால் பாதிக்கப்பட்டோரில் 44.1 வீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களெனத் தெரிவிப்பபடுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .