Freelancer / 2026 மார்ச் 14 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது நிலவி வரும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன் காரணமாக, கடும் வெயிலுக்கு மத்தியில் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என பாடசாலை மாணவர்களுக்கு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
நாட்டில் நிலவும் இடைப் பருவக்காற்று காலநிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் தற்போது கடும் வெப்பமான வானிலை நிலவுகிறது.
இதன் விளைவாக மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலையானது அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தை எட்டியுள்ளது.
வெப்பச் சுட்டெண்ணின்படி, இந்த மதிப்பானது 45 இற்கும் அதிகமானது என்பதோடு, இது 'அதிக அவதானம்' செலுத்த வேண்டிய மட்டமாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. R
8 minute ago
37 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
37 minute ago
1 hours ago
3 hours ago